Ball Missing

ரெய்னா : அண்ணே பாத்தீங்களா நான் அடிச்ச அடில பந்தையே காணோம் .
டோனி : டேய் மடையா ஸ்டெம்பயும் தாண்டா காணோம்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

Lost For Win

வெற்றி பெறுவதற்காகவே தோற்றோம் - சேவக் அதிரடி 
=======================================

ஐ பி எல் போட்டிகளில் நடப்பு ஆண்டில் இறுதி இடம் பெறும் அணி அடுத்த ஆண்டு கோப்பையை வெல்ல வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது . அதனால்தான் இந்த முறை போராடி கடைசி இடத்தை பிடித்ததாக சேவக் தெரிவித்தார் . அடுத்த முறை கோப்பையை வெல்வதே இந்த முறை எங்கள் லட்சியம் என்று அவர் தெரிவித்தார் .

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

New Ideas for Fast Cricket

விரைவான கிரிக்கெட் விளையாட்டிற்கு சில யோசனைகள் 

1. T20 போல TOSS 20 நடத்தலாம். காசை சுண்டி விட்டு வெற்றியாளரை தீர்மானிக்கலாம் .
2. ஒவ்வொரு அணியிலும் ஒரு பௌலேர் ஒரு பட்ஸ்மான். ஒரு இன்னிங்க்சுக்கு ஒரு ஓவர் மட்டுமே. அதிக ரன் எடுப்பவர் வெற்றியாளர். இதனால் ஒரு டீம்க்கு ஒரு பௌலேர் ஒரு பட்ஸ்மான் போதும். மீதி ஒன்பது பீல்டேர்களுக்கு நன்றாக பந்து பொறுக்க தெரிந்தவர்கள் போதும் . இதனால் அதிகப்படியான டீம்களை உருவாக்கி நிறைய லாபம் பார்க்க முடியும் .
3. கிஸ் கர்ல்ஸ் - பட்ஸ்மான் சிக்ஸர் பௌண்டரி அடித்து விட்டால் கிஸ் கர்ல்ஸ் ஓடி வந்து முத்தம் கொடுப்பார்கள் . இதனால் கிஸ் கிடைக்க வேண்டும் என்பதற்காக பட்ஸ்மான் அதிரடியாக ஆடி ரசிகர்களை மகிழ்விப்பார் . மோஸ்ட் சிக்செர்ஸ் போல மோஸ்ட் கிஸ்ஸஸ் அவார்ட் கொடுத்து கிளுகிளுப்பை கூட்டலாம் .

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

Big Position

ஐ பி எல் 2011

ரிபோர்ட்டர் : புனே வரியோர்ஸ் எட்டாவது இடத்தில் இருப்பது உங்களுக்கு கவலை அளிக்கவில்லையா ?

யுவராஜ் : இப்போ ஒரு குழந்தைகிட்ட ஒரு சாக்லேட் வேணுமா எட்டு சாக்லேட் வேணுமான்னு கேட்டா என்ன சொல்லும் ?

ரிபோர்ட்டர் : எட்டு சாக்லேட் வேணும்னு சொல்லும் !

யுவராஜ் : உங்ககிட்ட ஒரு ரூபா வேணுமா எட்டு ரூபா வேணுமான்னு கேட்டா என்ன சொல்வீங்க ?

ரிபோர்ட்டர் : எட்டு ரூபா வேணும்னு !

யுவராஜ் : அப்போ எட்டு தானே பெரிசு ? நாங்கள் "பெரிய" இடத்தில் இருப்பதற்காக பெருமை படுகிறோம்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

First in List

ஐ பி எல் 2011

ரிபோர்ட்டர்: புனே வரியார்ஸ் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறதே ?

யுவராஜ் : புள்ளிகள் பட்டியலை படிக்க தெரியாதவர்களின் குற்றச்சாட்டு இது. பட்டியலை தலை கீழாக படியுங்கள் எங்கள் அணி முதல் இடத்தில் இருப்பதை உணர்ந்து கொள்வீர்கள் .

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

Exam as IPL

இது மாணவர்களின் சமீபத்திய கோரிக்கை 

  1. கிரிக்கெட் ல் ஒரு நாள் போட்டிகளுக்கு பதில் ட்வென்டி ட்வென்டி ஐ அறிமுகபடுத்தியது போல எக்சாமிலும் மூன்று மணி நேரத்துக்கு பதில் ஒரு மணி நேரமாக குறைக்கலாம் . கேள்விகளை குறைத்து மதிப்பெண்களை கூட்டலாம் .
  2. முப்பது நிமிடங்களுக்கு ஒரு முறை ஸ்ட்ரடேகிக் இடைவேளை விடலாம் .
  3. தொடர்ந்து மூன்று தெரியாத கேள்விகள் காணப்பட்டால் ப்ரீ ஹிட் .. அதாவது ப்ரீ கொஸ்டின் கொடுக்கலாம் . மாணவர்கள் கேள்வியை அவர்களே பிரேம் செய்து கொள்ளலாம் .
  4. முதல் பதினைந்து நிமிடங்கள் பவர் அன்செர் அதாவது இன்விஜிலேட்டர் ஹால் க்கு வெளியே நிற்பார் .
  5. ஒவ்வொரு சரியான விடைக்கும் சீர் கல்ஸ் நாட்டியமாடி உற்சாக படுத்துவார்கள் .
  6. மாட்டிகொள்ளாமல் பிட் அடிப்பவருக்கு கமால் பிட்டர் மற்றும் தொடர்ந்து ஒரே எக்ஸாம் பல முறை எழுதுபவருக்கு மண் ஆப் தி எக்ஸாம் என அவார்டுகள் கொடுக்கலாம் .

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

Funny Names for Team

சரியாக விளையாடாத அணிகளுக்கு புது பெயர் 

சென்னை சூப்பர் கிங்க்ஸ் - சென்னை சொதப்பல் கிங்க்ஸ் 
கொச்சி டாஸ்கேர்ஸ் கேரளா - கொச்சி டக்கேர்ஸ் (duck) கேரளா 
புனே வார்ரியர்ஸ் - புனே ஒரீர்ஸ் (worry)
டெல்லி டார் டெவில்ஸ் - டெல்லி போர் (bore) டெவில்ஸ்
ராயல் சலஞ்செர்ஸ் - ராயல் காவேன்ஜெர்ஸ் (scavengers )
மும்பை இந்தியன்ஸ் - மும்பை சோம்பியன்ஸ்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

Cheer Girls Idea

செந்தில் : அண்ணே ! இந்த சியர்  கர்ல்ஸ் ன்னா யாருன்னே ?

கௌண்டமணி : டேய் ! விளையாடற ப்ளேயர்ஸ் ஐயும் ரசிகர்களையும் உற்சாகபடுத்த கவர்ச்சியான மூணு பொண்ணுங்க கிரௌன்ட்ல ஆடுவாங்க . அவங்கதான் சியர் கர்ல்ஸ் .

செந்தில் : இத மாதிரி பஸ்ல ட்ரைன்ல பயனிகள உற்சாகபடுத்த , ஸ்கூல்ல மாணவர்கள உற்சாகபடுத்த ஆபீஸ்ல வொர்க் பண்றவங்கள உற்சாகபடுத்த ... இப்படி சியர் கர்ல்ஸ் இருக்காங்களான்னே?

கௌண்டமணி : விட்டா பார்லிமென்ட் ல எம் பிக்கள உற்சாகபடுத்த  சட்டசபைல எம் எல் எக்கள உற்சாகபடுத்த இப்படி கேட்டுகிட்டே போவியே ! ஓடி போடா நாயே !

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

Goundamani - Senthil Comment

செந்தில் : அண்ணே ! நேத்து ஐ பி எல் மேட்ச் பாத்தேன். மூணு பேரு நல்ல ஆடினாங்க .

கௌண்டமணி : நேத்து மும்பை இந்தியன்ஸ் க்கும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் க்கும் மேட்ச் நடந்திச்சி . எந்த டீம்ல எந்த மூணு பேருடா நல்ல ஆடினாங்க ?

செந்தில் : டீம்ல இல்லண்ணே !

கௌண்டமணி : பிறகு  யாருடா !

செந்தில் : அழகழகா மூணு பொண்ணுங்க ! நான் அப்படியே சொக்கி போயிட்டேன் !

கௌண்டமணி : சென்னை சூப்பர் கிங்க்ஸ் தோத்து போச்சுன்னு வெறுப்புல இருக்கேன் ! நான் அரிவாள எடுக்குறதுக்குள்ள ஓடி போய்டு !

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

Team Spirit !

ரிபோர்ட்டர் : எல்லா டீம் லயும் பாட்ஸ் மான் பிப்டி செஞ்சுரி ன்னு அடிச்சு தூள் பண்றாங்க ! உங்க டீம்ல மட்டும் எல்லா பாட்ஸ் மானும்  சேர்ந்து பிப்டி அடிக்குறீங்களே ?

யுவராஜ் : இப்போ புரியுதா ? நாங்க மட்டும் தான் "ஒரே குழுவா" சேர்ந்து விளையாடரோம்னு ?

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

Secret of Dress

சங்ககரா : வீரு ! நீங்க தொடர்ந்து தோத்துகிட்டே இருக்கீங்க ! இருந்தாலும் டெல்லில உங்கள பார்த்தா மக்கள் ஓடி வந்து வாழ்த்து சொல்றதும் போட்டோ எடுக்குரதுமா அமர்கள படுதாமே ? எப்படி ?

வீரு : சும்மாவா ! எக்ஸ்டரவ மும்பை இந்தியன்ஸ் பனியன் வங்கி வச்சுருக்கேன் ! விளையாடற நேரம் போக மீதி நேரம் மும்பை இந்தியன்ஸ் டிரஸ் ம் கூலிங் கிளாஸ் ம் தொப்பியும் தான் !

சங்ககரா : நானும் கொல்கத்தா நைட் ரிடேர்ஸ் டிரஸ் க்கு ஆர்டர் பண்ணிடறேன் !

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

Out Of Form

ரைனா : நான் அவுட் ஆப் பார்ம் அப்படின்னு எல்லோரும் திட்டறீங்களே ! எனக்கு பௌலிங் பண்ணும்போது வேணும்னே ஸ்டம்ப் ஐ பார்த்து பௌலிங் பண்ற பௌலர் ஐ யாராவது திட்டறீங்களா?

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

Easy Rules

அம்பயர்: ரைனா தம்பி ! பாட்டிங் பண்ணிதான் சிக்ஸர் அடிக்கணும் . பௌலர் போடற பால கையால புடிச்சு பௌண்டரிக்கு அந்த பக்கம் கொண்டு போய் எறிஞ்சுட்டு வரக்கூடாது !

ரைனா : ரொம்ப நேரமா சிக்ஸர் போர் எல்லாம் போக மாட்டேங்குது . கொஞ்சம் ரூல்ஸ் ஐ எனக்காக தளர்த்தி உதவி பண்ண கூடாதா?

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

Reason for Failure ...

ஜெயலலிதா : தீய சக்திகளின் காபந்து அரசு இருப்பதால்தான் சென்னை சூப்பர் கிங்க்ஸ் தொடர்ந்து தோற்று வருகிறது . மே 13 அன்று வாக்கு எண்ணிக்கை முடிந்து கழக அரசு அமைந்த பின்பு நடக்கும் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் வெற்றி வாகை சூடும் . எனவே சென்னை சூப்பர் கிங்க்ஸ் விளையாடும் போட்டிகளை மே13 க்கு பிறகு நடத்த வேண்டுமென வேண்டி விரும்பி கேட்டு கொள்கிறேன் . 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

Again You Will Be The CHampion

மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்க்ஸ் 

டோனி : ஏன்டா நல்லாதானே விளையாடிட்டு இருந்த ? திடீர்ன்னு ஏன் அவுட் ஆகி அழுதுகிட்டே ஓடி வர்ற?

ரைனா : நான் ஒவ்வொரு பால் அடிக்கும்போதும் ஹர்பஜன் பக்கத்துல நின்னுகிட்டு "இந்த தடவையும் கப் உனக்குத்தான் ... விடாத ... அடி" ன்னு சொல்லி சொல்லி கிண்டல் பண்றான் !

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

Non Striker Out

அம்பயர்: பாட்டிங் பண்ற அனிர்ஹுத தான் அவுட் . நீங்க எங்க போறீங்க ?

மோர்கல் : சாரி அம்பயர் . நீங்க ஒரு விரல தூக்னதும் நான்தான் அவுட் ன்னு நெனச்சு உணர்ச்சி வசப்பட்டுட்டேன் .

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

Quick Out

டோனி : ஏன்டா ஒரு ஓவர் கூட விளையாடல்ல . அதுக்குள்ள அவுட் ஆகி வந்திட்ட ?

முரளி விஜய் : நீங்கதானே டிரெஸ்ஸிங் ரூம் பக்கம் நின்னுகிட்டு "வா வா" ன்னு கை காட்டினீங்க ?

டோனி : டேய் உன்ன உற்சாகபடுத்த கை காட்டி காட்டினேன்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

Car Came Go Home

ரைனா : அண்ணே கார் வந்திடிச்சி வீட்டுக்கு போலாம் ..

டோனி : டேய் அது பரிசு கார்டா. ஒரு இன்னிங்க்ஸ் தான் முடிஞ்சிருக்கு . அடுத்த இன்னிங்க்ஸ் கூட விளையாடிட்டு தான் வீட்டுக்கு போணும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

Competitor to CSK

நிருபர் : சென்னை சூப்பர் கிங்சின் போட்டியாளர் ஆக யாரை கருதுகிறீர்கள் ?

டோனி : டெல்லி டார் டெவில்ஸ் மற்றும் டெக்கான் சார்ஜெர்ஸ் இவர்களை  நினைத்து கவலை கொள்கிறோம் . அவர்கள் சிறப்பாக விளையாடி தங்கள் இறுதி இடத்தை தக்க வைத்து வருகிறார்கள் . நாங்களும் இனி வரும் போட்டிகளில் சிறப்பாக விளையாடி கடைசி இடத்தை பிடிக்க போராடுவோம் .

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS