Lost For Win

வெற்றி பெறுவதற்காகவே தோற்றோம் - சேவக் அதிரடி 
=======================================

ஐ பி எல் போட்டிகளில் நடப்பு ஆண்டில் இறுதி இடம் பெறும் அணி அடுத்த ஆண்டு கோப்பையை வெல்ல வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது . அதனால்தான் இந்த முறை போராடி கடைசி இடத்தை பிடித்ததாக சேவக் தெரிவித்தார் . அடுத்த முறை கோப்பையை வெல்வதே இந்த முறை எங்கள் லட்சியம் என்று அவர் தெரிவித்தார் .

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

New Ideas for Fast Cricket

விரைவான கிரிக்கெட் விளையாட்டிற்கு சில யோசனைகள் 

1. T20 போல TOSS 20 நடத்தலாம். காசை சுண்டி விட்டு வெற்றியாளரை தீர்மானிக்கலாம் .
2. ஒவ்வொரு அணியிலும் ஒரு பௌலேர் ஒரு பட்ஸ்மான். ஒரு இன்னிங்க்சுக்கு ஒரு ஓவர் மட்டுமே. அதிக ரன் எடுப்பவர் வெற்றியாளர். இதனால் ஒரு டீம்க்கு ஒரு பௌலேர் ஒரு பட்ஸ்மான் போதும். மீதி ஒன்பது பீல்டேர்களுக்கு நன்றாக பந்து பொறுக்க தெரிந்தவர்கள் போதும் . இதனால் அதிகப்படியான டீம்களை உருவாக்கி நிறைய லாபம் பார்க்க முடியும் .
3. கிஸ் கர்ல்ஸ் - பட்ஸ்மான் சிக்ஸர் பௌண்டரி அடித்து விட்டால் கிஸ் கர்ல்ஸ் ஓடி வந்து முத்தம் கொடுப்பார்கள் . இதனால் கிஸ் கிடைக்க வேண்டும் என்பதற்காக பட்ஸ்மான் அதிரடியாக ஆடி ரசிகர்களை மகிழ்விப்பார் . மோஸ்ட் சிக்செர்ஸ் போல மோஸ்ட் கிஸ்ஸஸ் அவார்ட் கொடுத்து கிளுகிளுப்பை கூட்டலாம் .

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

Big Position

ஐ பி எல் 2011

ரிபோர்ட்டர் : புனே வரியோர்ஸ் எட்டாவது இடத்தில் இருப்பது உங்களுக்கு கவலை அளிக்கவில்லையா ?

யுவராஜ் : இப்போ ஒரு குழந்தைகிட்ட ஒரு சாக்லேட் வேணுமா எட்டு சாக்லேட் வேணுமான்னு கேட்டா என்ன சொல்லும் ?

ரிபோர்ட்டர் : எட்டு சாக்லேட் வேணும்னு சொல்லும் !

யுவராஜ் : உங்ககிட்ட ஒரு ரூபா வேணுமா எட்டு ரூபா வேணுமான்னு கேட்டா என்ன சொல்வீங்க ?

ரிபோர்ட்டர் : எட்டு ரூபா வேணும்னு !

யுவராஜ் : அப்போ எட்டு தானே பெரிசு ? நாங்கள் "பெரிய" இடத்தில் இருப்பதற்காக பெருமை படுகிறோம்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

First in List

ஐ பி எல் 2011

ரிபோர்ட்டர்: புனே வரியார்ஸ் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறதே ?

யுவராஜ் : புள்ளிகள் பட்டியலை படிக்க தெரியாதவர்களின் குற்றச்சாட்டு இது. பட்டியலை தலை கீழாக படியுங்கள் எங்கள் அணி முதல் இடத்தில் இருப்பதை உணர்ந்து கொள்வீர்கள் .

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS